தமிழகத்தில் பணப்புழக்கம் ஏன் இல்லை.? அதிர்ச்சியூட்டும் கசப்பான உண்மை...

தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன ..?

Update: 2022-12-11 08:15 GMT

பைல் படம்

பணப்புழக்கம் குறைந்து போனது பற்றி ஒரு தொழிலதிபரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த தொழிலதிபர் கூறியதாவது: தமிழர்கள் உடல் உழைப்பை விரும்புவதில்லை... அதோடு சாராயம், மது மற்றும் சோம்பேறித்தனம், லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம் செய்து அரசியல்வாதிகளைப் போல் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை. தமிழர்கள் இப்பொழுது வேலைக்கு கிடைப்பது இல்லை. அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தங்களது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஹார்டுவேர், பெயின்டர்கள் கார்பெண்டர், பெரிய ஆள் ஹெல்பர்கள், பட்டர்கள், டெயிலர்கள், மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர், மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள் அத்தனை பேரும் வடநாட்டவர்கள் தான்.தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர். அவரிடம் பேசினோம். அவர் சொன்ன விவரங்களை கேட்டு தலை கிறுகிறுத்தது.

மாதம் மாதம் ரூ.10000/- (பத்தாயிரம்) ஊருக்கு அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன். வந்த பின் தான் யோசித்தேன். இந்த ஒருவர் மாதம் 10000 அனுப்புகிறார்.*இப்படி 10 பேர் அனுப்பினால் ஒரு லட்சம்...நூறு பேர் அனுப்பினால் ஒரு கோடி.ஆயிரம் பேர் அனுப்பினால் பத்து கோடி...ஒரு லட்சம் பேர் அனுப்பினால் ஆயிரம் கோடி..

மனம் அதிர்ச்சியடைந்தது. முதலில் இவர்களின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது..? என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன்... தொழில் நகரங்களான பெரும் நகரங்களில், மாவட்ட அளவில், உதாரணத்திற்கு திருப்பூரில் மூன்று லட்சம் பேரும், கோவையில் ஏழு லட்சம் பேரும், சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள்.

அப்போ சேலம், ஈரோடு போன்ற இன்ன பிற மாவட்டங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்து போன நான்.சென்னை, கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து, கணக்கு பார்த்தேன். மொத்தம் முப்பது லட்சம் பேர். ஒருவர் மாதா மாதம் பத்தாயிரம் என்றால் 30 லட்சம் பேருக்கு கணக்கு போட்டேன்.மூணாயிரம் கோடி எனக் காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது...

மாதா மாதம் 3000 கோடி என்றால், வருடத்திற்கு 36000 கோடி... இது அனைத்தும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு, தமிழக மக்களையும், சிறு, குறு, பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம், வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டுருக்கிறது. அங்கே இருக்கும் மக்களையும் சிறு, குறு, பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புழங்கும் பணத்தில் பாதி டாஸ்மாக் கடைகளுக்கு சென்று விடுகிறது. பின்னர் எப்படி தமிழகத்தில் பணப்புழக்கம் இருக்கும்.

இது வெறும் தமிழகத்தின் மூன்று.. மாவட்டக் கணக்கு..... மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும், வட மாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி, மயக்கம் வந்து, மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்...!!! இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு... இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து, அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை..

இன்னொரு பிரச்னை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம்..... கைத்தொழில்....எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது.... அதனால் லட்சக்கணக்கான பொருட்கள், அதாவது உளி, சுத்தியல் ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.

சப்தமின்றி, யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும், உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது. இதை தமிழன் எப்போது உணர்வது..?மிகவும் கொடுமையானது..... ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர் கைகளில் சென்று கொண்டுள்ளது, களை எடுத்தல், அறுப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள். இனி என்னாகும்...? யோசியுங்கள்.

பட்டாலும், கெட்டாலும் வருந்தாத, திருந்தாத சோம்பேறிகள் இருக்கும் வரை இந்த அவல நிலை தொடரும்....!!*தமிழ் நாட்டவர்கள்..!? இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்...? இதில் சில பிழைகள் இருக்கலாம்... ஆனால், இக்கருத்தில் பெரும் உண்மை உள்ளது...தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

சினிமா, அரசியல், ஜாதி, மொழி, இனம், மறந்து முன்னேற்றம் ஒன்றே லட்சியமாக கொண்டு உழைத்தால் உயர வாய்ப்பு இன்னும் உள்ளது. விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வாய் இல்லையென்றால் அழிவை நோக்கி நிச்சயம் தமிழகம் நாளைய தமிழகத்தை எண்ணி என்ற ஒரு சிறிய பதிவு உண்மையென்றால் அனைவரும் சிந்தியுங்கள் நன்றி.தேர்தல் அன்று ஓட்டுக்காக கிடைக்கும் பணமும் பிரியாணியுமே தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை எவருமே மறுதலிக்க முடியாது. இந்த பேராபத்தை  உணரவேண்டும்.இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் உள்ள உண்மைகள் தமிழர்களை விழிப்படைய வைத்தால் நல்லது.

Tags:    

Similar News