கருக்கலைப்பின் போது இளம்பெண் பலி: தேனி தனியார் டாக்டர் மீது வழக்கு

தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்த போது இளம்பெண் பலியானதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-01-03 07:09 GMT

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமம் நாயக்கர் தெருவில் வசிக்கும் பாண்டியபாபு என்பவரது மனைவி இந்துராணி, 22. கர்ப்பிணியான இவர், தேனியில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார். (போலீசார் கேட்டுக் கொண்டதால், டாக்டர் பெயர் நீக்கப்பட்டுள்ளது).

அந்த மருத்துவர் இளம்பெண் வயிற்றில் வளரும் கரு, குறைபாடுடன் வளர்கிறது. எனவே கலைத்து விடுவோம் எனக்கூறியுள்ளார். இதற்கு இருவரும் சம்மதித்துள்ளனர். இந்த நிலையில் கருக்கலைப்பில் ஈடுபடும் போது, அந்த பெண்ணின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இளம்பெண் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாண்டியபாபு பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவடமும் விசாரணை நடைபெறும், அந்த மருத்துவர் மருத்துவ சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி இருந்தால் பிரச்னை இருக்காது. என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News