மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

தேனியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.;

Update: 2022-01-25 10:15 GMT

பைல் படம்.

தேனி அருகே உள்ள போடேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசிம்மன். இவர் பழனிபட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வபிரியா. இவர்களுக்கு திருமணம் நடந்து ஐந்து மாதம் ஆகிறது. போலீஸ்காரர் ராஜசிம்மன் தனது மனைவி செல்வபிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதற்கு ராஜசிம்மனின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து தேனி மகளிர் போலீசில் செல்வபிரியா புகார் செய்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி ஸ்டேஷன் முன்பாக அமர்ந்து தர்ணாவும் செய்தார். அதன் பின்னர் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் உஷா, போலீஸ்காரர் ராஜசிம்மன் உட்பட ஆறு பேர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

Similar News