ஆண்டிப்பட்டியில் மணல் திருடியவர்களுக்கு ஆதரவு: கிராமத்தினர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே, மணல் திருடியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-01-03 03:00 GMT

தேனி மாவ்ட்டம் ஆண்டிபட்டி பாலக்கோம்பை ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கோம்பை சேகர், பார்த்தசாரதி ஆகியோரின் இரண்டு டிராக்டர்களை ராஜதானி எஸ்.ஐ.,ராமபாண்டி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த டிராக்டர்களை கொண்டு செல்ல விடாமல் தடுத்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். ஓடையில் எடுக்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் பணத்தில் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் கூறினர்.

தேனி கூடுதல் எஸ்.பி., சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். வி.ஏ.ஓ., நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கிராம மக்கள் மீது ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News