கம்பத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு
கம்பத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.;
கம்பத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் சிவசாமி, 42. இவர் உத்தமபாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சீரடி சந்திப்பில் ரோட்டை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவசாமி தேனி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார். கம்பம் வடக்கு போலீசார் கார் டிரைவர் சையது முஸ்தபாவை கைது செய்தனர்.