பணியாற்றப்போகும் வாக்குச்சாவடி குறித்து முன்பே அறிந்து கொள்ள முடியுமா?
பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாது.;
தேர்தலுக்கு முந்தைய நாள் பணி ஆணை வழங்கும் நாளன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி மூலம், மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்) எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.
இப்பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி என்பது, முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மென்பொருள் மூலம் கணினியால் ஒதுக்கீடு செய்யப் படுவதால், தேர்தலுக்கு முந்தைய நாள் பணி ஆணை வழங்கும் நாளன்று காலை 7 மணிக்கு முன்பு யாரும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கைபேசி செயலி (mobile application) மூலம், நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. எனவே தேர்தல் பணிக்கு செல்பவர்கள், எந்த ஓட்டுச்சாவடி ஒதுக்கப்பட்டாலும், அதில் பணிபுரிய தயாராகவே இருக்க வேண்டும்.