கபசூர குடிநீர் ஒமைக்ரானை குணப்படுத்துமா? சித்தமருத்துவர் விளக்கம்

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கும் பணி மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது;

Update: 2022-01-10 13:45 GMT
ஆண்டிபட்டியில் கபசுரகுடிநீர் குடிக்கும் மாணவர்கள்.

ஆண்டிபட்டியில் ஒமைக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்காகவும், காய்ச்சல் வந்தால் குணப்படுத்தவும் கபசுர குடிநீர் வீடு, வீடாக அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் அறிமுகம் ஆனபோது, அதனை குணப்படுத்த கபசுரகுடிநீர் அறிமுகம் ஆனது. முதலில் இதனை அலோபதி டாக்டர்கள் எதிர்த்தனர். பின்னர் அரசே கபசுர குடிநீர் ஆபத்தில்லாதது. காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது என சான்று வழங்கியது. இதனை தொடர்ந்து பல மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் (இன்னும் சில இடங்களில் அனுமதிப்பதில்லை) கபசுர குடிநீரை நோயாளிகளுக்கு வழங்க அனுமதித்தனர். அதன் பின்னர் வரும் ஒவ்வொரு பேரிடருக்கும் கபசூர குடிநீர்  பெரிதும் பயன்பட்டு  வருகிறது.

இதன் ஒரே ஒரு பக்க விளைவு வயிற்று புண்ணை உண்டாக்கும் என்பதுதான். மற்றபடி இது மிகச்சிறந்த மருந்து தான். கொரோனானை குணப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியது. கபசுரகுடிநீர். தற்போது ஒமைக்ரான் வந்தாலும் குணப்படுத்தவும், வராமல் தடுக்க தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்கவும் கபசூர குடிநீர் வழங்கப்படுகிறது. ஆண்டிபட்டியில் இதனை வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். இது குறித்து சித்தா டாக்டர்களிடம் கேட்ட போது, கபசூரகுடிநீரும் மருந்து தான். எனவே தேவைக்கு மட்டுமே அதனை பயன்படுத்தலாம். எந்த வகை வைரஸ் தொற்றும் எதிரான எதிர்ப்பு சக்தியை கபசூரகுடிநீர் உடலில் தோற்றுவிக்கும். தவிர காய்ச்சலை குணப்படுத்தவும் பெரும் பங்காற்றும் என்றனர்.

Tags:    

Similar News