கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் பயணம் செய்தவர் பலி
கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்தவர் பயணத்தின் போதே இறந்தார்.;
திருச்சி இலந்தபட்டி ராஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். (வயது அறுபத்தி இரண்டு).ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரான இவர், கம்பத்தில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பஸ்சிலேயே உட்கார்ந்த நிலையிலேயே இறந்து விட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.