பழைய,புதிய பஸ் நிலையங்களில் இருந்து தேனி ரயில் நிலையத்திற்கு பஸ் வசதி

தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.;

Update: 2022-05-27 16:23 GMT
தேனி ரயில் நிலையம்

மதுரை- தேனி அகல ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. தேனியில் ரயில்வே ஸ்டேஷன் நகரின் மையப்பகுதியினை ஒட்டிய வயல்பகுதிகளுக்குள் அமைந்துள்ளது. புதிய பஸ் நிலையத்தில் இருந்தோ, பழைய பஸ் நிலையத்தில் இருந்தோ ஆட்டோவிலோ இதர வாகனங்களிலோ தான் தேனி ரயில்வே ஸ்டேஷன் வர முடியும். இதனால் தேனியில் இரண்டு பஸ்ஸ்டாண்ட்களையும் ரயில்வே ஸ்டேஷனுடன் இணைத்து பஸ் இயக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோவில் வந்தால் 200 ரூபாய் கட்டணம் வரை செலவாகும். பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து ஐம்பது ரூபாய் வரை செலவாகும். ஆனால் அரசு பஸ்சில் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பதினைந்து ரூபாயும், பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து பத்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் இந்த பஸ் தயாராக இருக்கும். பயணிகள் இந்த பஸ்சில் ஏறி இரண்டு பஸ்ஸ்டாண்ட்களுக்கும் சென்று அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.

Tags:    

Similar News