சிறுவனுக்கு பாலியல் தொல்லை: குண்டாசில் ஒருவர் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் மும்மூர்த்தி, 20. இவர் இப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். கலெக்டர் முரளீதரன் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.