தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-22 04:46 GMT

தமிழகத்தில் அனுமதியற்ற மதுபானக்கடைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சந்து, சந்துக்கு மதுவிற்கும் கடைகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன என முன்னாள் முதல்வர் எடப்பாடியார் புகார் தெரிவித்திருந்தார். அவர் கூறியது உண்மை தான். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் சந்துக்கடைகள் அதிகம் என ஒரு கணக்கெடுப்பே நடத்தலாம். குறிப்பாக தேனியில் பழைய பஸ் நிலயைம் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் மிக அதிகமாக உள்ளன.

புதிய பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள சந்துக்கடைகளில் மட்டும் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே பாரம்பரியமாகவே நடந்து வரும் சந்துக்கடை என்ற பெருமை பெற்ற சந்துக்கடை நடக்கிறது. தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் தலைமையில் மாவட்டம் முழுவதும் மட்டுமல்ல, மாவட்ட தலைநகரிலாவது சந்துக்கடைகளை கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News