தேனி தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி மும்முரம்..!

தேனி லோக்சபா தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

Update: 2024-04-11 05:26 GMT

பூத் ஸ்லிப் (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதியில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பி.எல்.ஓ.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது பூத் லெவல் ஆபீசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இவர்கள் தான் பூத் லெவல் ஆபீசர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் தான் பூத் வாரியாக வாக்காளர் சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்குதல், இடம் பெயர்ந்த வாக்காளர்களை இடம் மாற்றுதல் உட்பட தேர்தல் கமிஷன் வழங்கும் அத்தனை பணிகளையும் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்த்தல், நீக்கள், திருத்தம் செய்தல் பணிக்காக முகாம் நடத்தப்படும் என ஆண்டு தோறும் அறிவிக்கும். அந்த கால கட்டங்களில் இவர்கள் தான் முகாம் போடுவார்கள். இவர்கள் தான் அத்தனை தேர்தலுக்கும் பூத் சிலிப்களை வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டும் கடந்த வாரமே பூத்சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. தற்போது வீடு, வீடாக பூத் சிலிப்களை இவர்கள் வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த பணி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூத் சிலிப்கள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் தேர்தல் நாளன்று, இந்த பி.எல்.ஓ.,க்கள் ஓட்டுச்சாவடி அருகே அமர்ந்து வாக்காளர்களை அடையாளம் காண உதவும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News