தேனி மாவட்டத்தில் 10,945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது.

Update: 2022-01-10 11:45 GMT

தேவதானப்பட்டியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை,  தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் முரளீதரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 108 பேர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 5 லட்சத்து 72 ஆயிரத்து 340 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 41 ஆயிரத்து 753 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுகாதார, மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News