போடி நெல் வயலுக்குள் நிர்வாணமாக கிடந்த முதியவர் உடல்
போடியில் வயலுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
போடி அருகே குரங்கனி முட்டைக்கோஸ் மலைப்பகுதியில் போடி ராணி பண்ணைக்கு சொந்தமான வயலில் சமீபத்தில் நெல் நடவு செய்யப்பட்டு நாற்றுகள் ஒரு அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.
இந்நிலையில் இந்த வயலில் இன்று காலை உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஒரு முதியவர் உடல் கிடந்தது. அவரை அடையாளம் தெரியவில்லை.
இவரது சாவில் சந்தேகம் உள்ளதால், கொலையா என இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.