போடியில் கொட்டித்தீர்த்த மழை - கேரளாவுடன் போக்குவரத்து துண்டிப்பு

போடி மெட்டில் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, கேரளாவுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 04:00 GMT

போடி மெட்டில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நடக்கும் சீரமைப்பு பணிகளை, கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி போடியில் அதிகளவாக 129.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் கொட்டகுடி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஆற்றின் கரைகளை தாண்டி தண்ணீர் வெளியே வரும் அளவு வெள்ளப்பெருக்கு இருந்தது.

இந்த மழையால் போடி மெட்டு மலைச்சாலையில் பகலில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதனை செய்து கொண்டிருக்கும் போதே, நேற்று இரவு 8வது வளைவு, 9வது வளைவு, புலியூத்து அருவி பகுதிகளில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் மரங்கள் ரோட்டில் விழுந்தன. சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன.

இதனால் போடி- மூணாறு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போடியில் இருந்து செல்லும் வாகனங்கள்,  முந்தலில் நிறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டன. தற்போது ரோட்டை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று மழை குறைந்தால்,  மதியத்திற்கு மேல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News