வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட போடி டிஎஸ்பி

போடியில் கொட்டகுடி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு சிறுவர்களை போடி டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் ஏணிக்கயிறு கட்டி மீட்டனர்.

Update: 2021-11-23 13:25 GMT

போடி கொட்டகுடி ஆற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களுடன் டி.எஸ்.பி., சுரேஷ் (டிஷர்ட் அணிந்திருப்பவர்)

போடி கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வௌ்ளத்தில் அணைப்பிள்ளையார் கோயில் அணையில் சிக்கிக் கொண்ட நான்கு சிறுவர்களை போடி டி.எஸ்.பி., தலைமையிலான போலீஸ் படையினர் பத்திரமாக மீட்டனர்.

போடியை சேர்ந்த 13 வயது சிறுவர்கள் மேலச்சொக்கநாதபுரம் பாபு, திருமலாபுரம் நதின், வினோபாஜிகாலனி கவுதம், கண்ணன் ஆகிய நான்கு பேரும் இன்று அணைப்பிள்ளையார் கோயில் அணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குரங்கனி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் அணையில் (கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை) பெரும் வெள்ளம் வந்தது.

இந்த வெள்ளத்தி்ல் நான்கு சிறுவர்களும் சிக்கிக் கொண்டனர். அதிர்ட்டவசமாக ஆற்றங்கரையில் இருந்த ஒரு இலவம் மரத்தை பிடித்து ஏறிய நால்வரும், அங்கிருந்த ஒரு பாறையில் பத்திரமாக அமர்ந்து கொண்டனர். தகவல் அறிந்த போடி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் வந்து நான்கு சிறுவர்களையும் , ஏணிக்கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

மழைக்காலம் முடியும் வரை யாரும் அணைப்பிள்ளையார் கோயில் அணையில் குளிக்க வர வேண்டாம் என போலீசார் போடி பகுதி மக்களை அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News