போடி அருகே இருதரப்பினர் மோதல்: கல்வீச்சு, கலவரத்தால் பதட்டம்; போலீஸ் குவிப்பு

போடி அருகே சிலமலை கிராமத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

Update: 2021-10-30 08:08 GMT

போடி சிலமலை கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால், பிரச்னையை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தில் இருபிரிவை சேர்ந்த இளைஞர்களுக்குள் எழுந்த வாக்குவாதம் கடும் மோதலாக உருவெடுத்தது. இருதரப்பினரும் கை கலப்பு, கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களில் ஒருவரை ஒருவர் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து போடி டெப்போவை சேர்ந்த கண்டக்டர்களும் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த மறியலில் உயர் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் பேசினர்.

இதனால் போடி- தேவாரம் வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கி உள்ளது. போலீசார் இருதரப்பினரையும் சேர்ந்த சிலரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்து சமரச கூட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News