தேனி நகராட்சி 15 வது வார்டு பாஜக வேட்பாளராக புவனேஷ்வரி போட்டி
மக்கள் விடுத்த. வேண்டுகோளை ஏற்று முதன் முறையாக சிவக்குமரன் தனது மனைவி புவனேஷ்வரியை களமிரக்கியுள்ளார்;
தேனி நகராட்சி 15வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக புவனேஸ்வரி போட்டியிடுகிறார்.
பட்டதாரியான புவனேஸ்வரிக்கு( 44 ). இவரது கணவர் சிவக்குமரன் பாரதியஜனதா கட்சியில் வர்த்தக பிரிவின் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். தொழில் அதிபர்களான இவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சமூக சேவையில் ஆரம்ப காலம் முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா காலங்களில் தினமும் 400 பேருக்கு உணவு வழங்கி உள்ளனர். பல நுாறு பேருக்கு கல்வி உதவி, வேலை வாய்ப்பு உதவி, மருத்துவ உதவி, கல்விக்கடன் பெற்றுத் தருதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் என இவர்களது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவக்குமரன் தீவிரமான மோடி பக்தர். தேர்தல் பணி இவருக்கு கை வந்த கலை. மிகுந்த மதிநுட்பம், கொண்ட இவர் தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவராக இருந்துவரும் இவர் இதுவரை கூட்டணி கட்சிக்கே பணியாற்றி வந்தார்.
இப்போது பாரதிய ஜனதா தனித்து களம் இறங்குகிறது. இவர்கள் குடியிருக்கும் 15வது வார்டு இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதனால் இவரது மனைவியை போட்டியிட வைக்க வேண்டுமென மக்கள் விடுத்த. வேண்டுகோளை ஏற்று முதன் முறையாக சிவக்குமரன் தனது மனைவி புவனேஷ்வரியை களமிரக்கியுள்ளார்.இந்த வார்டில் இவர்கள் குடும்பத்திற்கு தனி செல்வாக்கும், மிகுந்த மரியாதையும் உள்ளது. தற்போது தனது வார்டு பகுதிக்கான தேவைகளை பட்டியலிட்டு வரும் புவனேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை தனது தேர்தல் வாக்குறுதிகளை வார்டு மக்கள் மத்தியில் வெளியிட உள்ளார்.