தேனி சமதர்மபுரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் மண்டகப்படி திருவிழா
தேனி சமதர்மபுரத்தில் பத்திரகாளியம்மன் கோயில் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.;
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவினை ஒட்டி, தேனியில் நாடார் இன மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேதியில் மண்டகப்படி திருவிழா நடைபெறும். சமதர்மபுரம் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது. காலையில் சாமி அழைப்பும், அன்னதானமும் நடந்தது. பின்னர் மண்டகப்படிக்கு வந்த பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
குத்துவிளக்கு பூஜை, பொங்கல் விழா, கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலப்பேட்டை இந்து நாடர் உறவின்முறை தலைமை நிர்வாகிகள் ராஜ்மோகன், முருகன், பழனியப்பன், திருப்பதி, கவுன்சிலர் நாராயணபாண்டி உட்பட பலர் இந்த மண்கப்படியில் பங்கேற்றனர். சமதர்மபுரம் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், மண்டகப்படிக்கு வந்த நிர்வாகிகளை வரவேற்று மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, பொன்னாடைகள் போர்த்தினர். நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். சமதர்மபுரம் நாடார் சங்க நிர்வாகிகள் மருதபாண்டி, தவமணி, அய்யப்பன், செல்வராஜ், ஜெயராமன், ராமர், பழனிவேல்ராஜன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.