கேரளாவில் மீண்டும் ஒலிக்க தொடங்கியது பெரியாறு அணை குறித்த அபாய எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே கேரளாவில் முல்லைப்பெரியாறு குறித்த அச்சங்களை மக்களிடம் பரப்ப தொடங்கி உள்ளனர்.

Update: 2022-06-01 02:45 GMT
முல்லை பெரியார் அணை (பைல் படம்).

முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் 131 அடிக்கும் மேலே உள்ளது. இன்று அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி விட்டதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட இடுக்கி மாவட்ட நிர்வாகம் அணை பற்றிய தவறான தகவல்களை மக்களிடம் பரப்ப தொடங்கி விடுகிறது.

தண்டோரா போட்டு மக்களிடம், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது. அணை எப்போதும் திறக்கப்படலாம் எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என அபாய எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வண்டிப்பெரியாறு, சப்பாத்து, வல்லக்கடவு, ஏலப்பாறை பகுதியில் இப்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.

இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கூட வாட்சாப், பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி (புலம்பி) வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பெரியாறு அணை பற்றிய ஒரு தவறான தகவல்களை பரப்ப கேரளா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கேரளாவில் இந்த தவறான பிரச்சாரங்களை கண்டித்து, பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News