அழகிய தேனி நகராட்சி திட்டம் துவக்கம்: வாரம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்
‘அழகிய தேனி நகராட்சி’ என்ற திட்டத்தின் கீழ் வாரம் ஒரு நாள் ஒரு வார்டு என்ற அடிப்படையில் மாஸ் கிளீனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தினமும் குப்பைகளை முழுமையாக அகற்றுவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. இதனால் வார்டுகளில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகள் ஒரு கட்டத்தில் குவிந்து விடுகிறது.
இப்படி குப்பைகள் சேருவதை தவிர்க்க தேனியினை சுத்தப்படுத்தும் வகையில் 'அழகிய தேனி நகராட்சி' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி வாரம் ஒரு நாள் ஒரு வார்டில் மாஸ் கிளீனிங் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாரம் ஒரு நாள் குறிப்பிட்ட வார்டில் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒன்று சேர்ந்து அந்த வார்டு முழுக்க ரோட்டோரம் முளைத்திருக்கும் புல் முதல், சாக்கடை, குப்பை என அத்தனையும் சீர் செய்து, சுத்தப்படுத்துகின்றனர்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் தேனி நகராட்சியில் ஆறு வார்டுகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று தேனி நகராட்சி 20வது வார்டில் பணிகள் நடந்தன.