தேனி மாவட்டத்தில் பழிக்குப்பழி கொலை முயற்சி- இருவருக்கு குண்டாஸ்

Goondas Act Punishment - தேனி மாவட்டத்தில் பழிக்குப்பழியாக கொலை முயற்சி செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-07-26 04:54 GMT

Goondas Act Punishment - தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணி தொட்டி தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் சுரேஷ். இவர் உத்தமபாளையம்- கம்பம் சாலையில் செயல்பட்டு வரும் கம்பம் ஸ்ரீகுமார் ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். சுரேஷ்  கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை, கே.புதூரில் பணத்திற்காக ஆட்களை வைத்து ராஜா என்பவரை கொலை செய்த சம்பவத்தில் உடந்தையாக இருந்திருக்கிறார்.

இதற்காக சுரேஷ் என்பவரை தீர்த்து கட்ட எண்ணி பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு கூலிப்படையை சேர்ந்த மதுரை, செல்லூர் ஊரத்தேவர் காம்பவுண்டில் குடியிருந்து வரும் அழகுமலை என்பவரின் மகன் நாகராஜ் மற்றும் மதுரை திருப்பாலை காம்பவுண்டில் குடியிருந்து வரும் ராஜா மகன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு கம்பம் பகுதியில் தங்கியிருந்து கடந்த 07.06.2022 அன்று ஹோட்டலில் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் வழிமறித்து சுரேஷ் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்று தலைமறைவாய் இருந்து வந்தனர்.

இவர்கள் இருவர் மீதும் பல்வேறு கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தனிப்படை அமைத்து மேற்கண்ட கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை மாவட்ட போலீசார் மதுரையில் பல பகுதிகளில் தேடி பொறி வைத்து 29.06.2022 அன்று கைது செய்தனர். இவர்கள் பல்வேறு வழக்குகளில்தொடர்புடையவர்கள் என்பதால், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News