தேனியில் கடன் தாெல்லையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.;
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வாலிபர் தீக்குளிக்க முயற்சி.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் கணேசன், 37. ஆட்டோ டிரைவரான இவர், கடன் வாங்கி ஆட்டோ வாங்கியிருந்தார். சரியாக தவணை கட்டவில்லை எனக்கூறி பைனான்ஸ் உரிமையாளர்கள் ஆட்டோவை எடுத்துச் சென்றனர். இதனால் மனம் உடைந்த கணேசன் தேனி கலெக்டர் அலுவலக வாசலில் வந்து தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கணேசனை மீட்டு, அவரது உடலில் தண்ணீர் ஊற்றி, காப்பாற்றிய பின்னர், தேனி ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.