மேக்கேதாட்டுவில் அணைகட்ட முயற்சி: கர்நாடக அரசைக் கண்டித்து தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது, மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது;

Update: 2021-07-26 09:30 GMT

மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது, மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News