ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா
ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.;
ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் கணிதமன்ற துவக்க விழாவில் பேராசிரியர் மணிகண்டன் பேசினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கணித மன்ற திறப்பு விழா நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மங்கையர்க்கரசி மாணவ, மாணவிகளுக்கு கணிதவியல் பற்றி பேசினார். நிகழ்ச்சியை மாணவி சாருமதி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் சண்முகவடிவு, கமலா, மணிமொழி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் சூரியபிரகாஷ் நன்றி கூறினார்.