கந்தசஷ்டி கவசம் தெரியும்...எத்தனை வகை தெரியுமா...

Kanda Sashti Kavasam Padal-ஆறுபடை முருகன் வீடுகளுக்கும் தனித்தனி கந்த சஷ்டி கவசம் உள்ளது அத்தனைக்கும் மிகச்சிறு வித்தியாசம் மட்டுமே உள்ளது;

Update: 2022-11-01 04:15 GMT

Kanda Sashti Kavasam Padal

Kanda Sashti Kavasam Padal-"உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலேஅள்ளி அணைத்திடவேஎனக்குள் ஆசை பெருகுதப்பா- முருகா" பக்தியில் திளைத்திடுகையில் பக்தர்களுக்கு தங்கள் இஷ்ட தெய்வங்களை இப்படி கொண்டாடிடத் தானே தோன்றும். அள்ளி அணைத்திடவே ஆசை பெருகிடுவதும் அதில் ஒரு வகை தான். பாலன் தேவராய சுவாமிகளுக்கும் இப்படித்தான், குமரன் அருள் பரிபூரணமாய் கிடைத்திட இன்று நாம் ஒலி நாடாக்களிலும், புத்தகங்களிலும் வாசிக்கும் சஷ்டிகவசத்தை மனமுருகி இயற்றினார். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அறுபடை வீடுகளுக்கும் பாலன் தேவராயர் கவசம் இயற்றியிருக்கிறார் என்பதே புதிய தகவலாகத் தான் இருக்கும். இப்பொழுது எல்லோராலும் படிக்கப்படும் சஷ்டிகவசம் திருச்செந்தூர் முருகனுக்குப் பாடப்பட்டது. இந்த கவசத்தை மற்ற ஐந்து படைவீடுகளின் கவசத்தோடு ஒப்பிடுகையில் சில ஒற்றுமைகளும் காணக் கிடைக்கிறது.

திருப்பரங்குன்றம் குமரனுக்கான கவசத்தில்,"கக கக கக கந்தனே வருகஇகஇக இக ஈசனே வருக.தக தக தக சற்குரு வருக" என்று குகனை அழைப்பார்.திருச்செந்தூர் சஷ்டி கவசத்தில்,"வாசவன் மருகா வருக வருகநேசக்குறமகள் நினைவோன் வருக" என்று கந்தனை அழைப்பார்.திருவாவினன்குடி தெண்டாயுதபாணிக்கான கவசத்தில்,"எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம்வாழ்த்தும் என் நாவினில் வந்தினிதிருந்தே" என்று வேண்டுவார்.திருச்செந்தூர் சஷ்டிகவசத்தில்,"நாவிற் சரஸ்வதி நற்றுணையாக" அருள்வாய் முருகா என்று வேண்டி நிற்பார்.

சுவாமிமலை குருநாதனுக்கான கவசத்தில்,"உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்கன்னலொன் றதனில் களைந்திடக் கருணைசெய்வதுன் கடனே செந்தில் நாயகனே" என்பார் பாலன் தேவராயர்.திருச்செந்தூர் சஷ்டிகவசத்தில்,"ஓதியே செபித்து உகந்து நீறணியஅஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்…மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்" என்பார்.

குன்றுதோறாடும் குமரனுக்கான கவசத்தில்,"காலில் தண்டை கலீர் கலீரெனசேலில் சதங்கை சிலம்பு கலீரென" முருகனின் வருகையை வர்ணித்திடுவார்.திருச்செந்தூர் சஷ்டிகவசத்தில்,"திருவடியதனில் சிலம்பொலி முழங்க" கந்தன் வருகையை காட்சிப்படுத்துவார். பழமுதிர்ச் சோலை பரமகுருவுக்கான கவசத்தில்,"கஷ்ட நிஷ்டூரம் கவலைகள் மாற்றிஅஷ்டலட்சுமி வாழ் அருளெனக் குதவி  இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே" என்று குகனை வேண்டுவார்.

திருச்செந்தூர் சஷ்டி கவசத்தில்,"எல்லாப் பிணியும் என்றெனைக் கண்டால் நில்லாதோட நீயெனக் கருள்வாய்" என்று கந்தனை துதிப்பார். மற்ற படைவீடுகளின் கவசத்தில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு திருச்செந்தூர் சஷ்டிகவசத்தில் உண்டு. "காக்க காக்க" என்று முருகனின் வேலை மையப்படுத்தி எழுதியிருப்பார்."என் உயிர்க்குயிராம் இறைவன் காக்க" என்று ஆரம்பித்து, "காக்க காக்க கனகவேல் காக்க" வரை தொடர்ந்திருப்பார்.

"எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும்பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்""பிள்ளையென்றென்பாய் பிரியமளித்து மைந்தன் என்மீது மனமகிழ்ந்தருளி தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்"

இறைவனிடம் சரணாகதி அடைந்திடல் என்பது பாலன் தேவராய சுவாமிகள் பாடியபடி இப்படித்தானே இருக்க வேண்டும். இதுவரை மற்ற படைவீடுகளின் கவசத்தை படித்திடாதவர்கள் தேடி படித்துப் பாருங்கள். பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடல் இன்று வரை பெரும்பகுதி முருகபக்தர்களால் பாடப்படுவது போல் இனிவரும் காலங்களிலும் கொண்டாடப்பட வேண்டும். "கண்கண்ட தெய்வமய்யா  நீயிந்தக் கலியுக வரதனய்யா  பாவியென்றிகழாமல்  எனக்குன் பதமலர் தருவாயப்பா"

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News