தேனியில் 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு வழங்கல்
தேனி மாவட்டத்தில் 77 பேருக்கு புதிதாக போலீஸ் பணியில் சேர உத்தரவு வழங்கப்பட்டது.;
தேனி மாவட்டத்தில் 24 ஆண் போலீசார், 53 பெண் போலீசார் உட்பட 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு இன்று வழங்கப்பட்டது. பணி நியமனம் பெற்ற 24 ஆண் போலீசார் ராமனாதபுரம் மாவட்டத்திலும், 23 பெண் போலீசார் கோவையிலும், 30 பெண் போலீசார் மதுரையிலும் மார்ச் 14ம் தேதி போலீஸ் பயிற்சியில் சேர உள்ளனர் என எஸ்.பி., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.