தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 120 பிரசவம் இலவசம் என அறிவிப்பு
பெருந்தலைவர் காமராஜர் 120வது பிறந்தநாளை தொடர்ந்து, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 120 பிரசவங்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மூன்று தலைமுறையாக இங்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. இங்கு பிறந்த பாட்டி, தாய், மகள் ஆகிய மூன்று தலைமுறையினர் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஆண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது இந்த மருத்துவமனை மிகவும் விரிவாக்கம் செய்யப்பட்டு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை தொடர்ந்து, இந்த மருத்துவமனையில் அவர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி முதல் தொடர்ந்து 120 பிரசவங்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மருத்துவமனை தேனியில் பெத்தாட்ஷி விநாயகர் கோயில் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. பயன் பெற விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களுக்கு மருத்துவமனையினை நேரில் அணுகலாம்.