போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: பாேக்குவரத்து பாதிப்பு
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண், மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.;
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண், மரங்கள் சரிந்துள்ளன.
போடி புலியூத்து மலைப்பாதையில் மீண்டும் மண், மரங்கள் சரிந்துள்ளதால் மூணாறுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக போடி மெட்டு மலைப்பாதையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண், பாறைகள், மரங்கள் சரிந்து போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக மட்டுமே போக்குவரத்து ஓரளவு சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று காலை பெய்த மழையில் போடி மெட்டு மலைப்பாதையில் புலியூத்து அருவிக்கு அருகே மீண்டும் மண், மரங்கள் சாய்ந்துள்ளது. இதனால் இந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.