நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு: கொண்டாட்டத்தில் தி.மு.க.,
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க., திகைத்துப்போய் உள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க., திகைத்துப்போய் உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவி பொதுப்பிரிவில் இருந்தால் அ.தி.மு.க., மிகப்பெரும் அளவில் தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுத்திருக்கும். தற்போது தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., திகைத்துப்போய் உள்ளது.
அ.தி.மு.க.,வில் உள்ள பலம் வாய்ந்த தலைவர் வீடுகளில் உள்ள பெண்கள் நேரடி அரசியலுக்கு வர விரும்பவில்லை. பலர் அரசுப்பணி (தேனி அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் மனைவி அரசு டாக்டர்) போன்ற முக்கிய பணியில் உள்ளனர். இதனால் அவர்கள் களம் இறங்குவதும் கேள்விக்குறியாக உள்ளது.
இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க., மிகவும் தீவிரமான வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தி.மு.க.,வில் அது போன்ற நிலை இல்லை. தி.மு.க., குடும்பத்து பெண்கள் நேரடி அரசியலில் களமிறங்கி வருகின்றனர். அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் களம் காண தயாராகவே உள்ளனர்.
எனவே தி.மு.க., கொண்டாட்டத்தில் உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது என நடுநிலை பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.