தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளும் பெண்களுக்கே ஒதுக்கீடு
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் ஆகிய ஆறு நகராட்சிகள் உள்ளன. அத்தனை நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் பெண்கள் பொதுப்பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டிற்குள் தேனி- அல்லிநகரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அப்போது நகராட்சி தலைவராக இருப்பவரே மேயராக தொடரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
எனவே தேனிக்கு முதன் முதலாக பெண் மேயர் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என தேனி மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.