பெண்கள் ஆதரவை அள்ளிச் சென்ற அ.தி.மு.க., வேட்பாளர் லோகநாயகி
கூடலுார் நகராட்சி 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் லோகநாயகி ஓட்டு சேகரிக்க சென்ற போது, வார்டில் உள்ள பெண்கள் தாங்களாக முன்வந்து அவருக்கு ஓட்டு சேகரித்தனர்.;
கூடலுார் நகராட்சி 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகி ஓட்டு சேகரிக்க சென்ற போது, பல தெருக்களில் வசித்த பெண்கள் அவருடன் தாங்களாக முன்வந்து ஓட்டு சேகரிக்க வேட்பாளருடன் வந்தனர்.
தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சி 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகி. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் இவர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் இரட்டை இலை சின்னத்தில் தனது வார்டில் களம் இறங்கி உள்ளார்.
இவர் இன்று காலை தங்களது வார்டு பகுதியில் தீவிரமான ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அழகாபுரி தெருவில் தொடங்கி, பாரவந்தான்சாலை, பாரஸ்ட் பங்களா தெரு, காந்திகிராமம், கோட்டைமேட்டு தெருக்களில் ஓட்டு சேகரித்தார். இவர் சென்ற இடமெல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
குடிக்க தண்ணீர், பால், காபி கொடுத்து உபசரித்தனர். முதியவர்கள் பலர் லோகநாயகிக்கு தங்களது ஆசீர்வாதத்தை வழங்கினர். குறிப்பாக லோகநாயகி ஓட்டு சேகரிக்க சென்ற தகவல் அறிந்த பெண்கள், யாரும் அழைக்காமலேயே தானாக முன்வந்து லோகநாயகியுடன் ஓட்டு சேகரிக்க சென்றனர்.
வார்டு பகுதியில் வசிக்கும் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் லோகநாயகிக்கு வாழ்த்துக்களையும், தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.