முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Mullaperiyar Dam Tamil Nadu - முல்லைப்பெரியாறு அணை ரூல்கர்வ் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக விவசாயிகள் வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.;
Mullaperiyar Dam Tamil Nadu - முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனவே அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டும் கேரளா அதனை ஏற்கவில்லை. மாறாக அதே சுப்ரீம் கோர்ட் மூலம் அணையின் நீர் மட்டத்தை மேலும் குறைக்கும் வகையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை தமிழகத்திற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் நிலையில் ரூல்கர்வ் முறையால் மேலும் இழப்புகள் அதிகரிக்கும். எனவே ரூல்கர்வ் முறையினை முல்லைப்பெரியாறு அணையில் அமல்படுத்தக்கூடாது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இன்று வழக்கு தாக்கல் செய்யப்படலாம், அவசர வழக்கு என்பதால் இந்த வாரமே விசாரணைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2