சாலை விபத்தில் அ.தி.மு.க., கிளை செயலாளர் பலி
பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே நடந்த விபத்தில் அ.தி.மு.க., கிளை செயலாளர் ஜெயபாண்டி பலியானார்.
பெரியகுளம் ஜெயமங்கலம் அ.தி.மு.க., கிளை செயலாளர் ஜெயபாண்டி, 38. இவர் சிந்துவம்பட்டியில் இருந்து ஜெயமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பாஸ்கரன் என்பவர் ஜெயபாண்டி இருசக்கர வாகனத்தில் மோதினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயபாண்டி மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.