கூடலுார் நகராட்சியை கைப்பற்றுவோம்: என்.எஸ்.கே.கே.ஆர் அருண்குமார்
கூடலுார் நகராட்சியை மீண்டும் அ.தி.மு.க., கைப்பற்றும் என, நகராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க நகர செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். அருண்குமார் தெரிவித்தார்.;
கூடலுாரில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 20 வார்டுகளில் போட்டியிடுகிறது. கூடலுார் நகராட்சி முன்னாள் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க நகர செயலாளருமாகிய என்.எஸ்.கே.கே.ஆர்., அருண்குமார், நகர துணைச்செயலாளர் பாலைராஜா, நகர அவைத்தலைவர் எம்.எஸ்.ஆர்., துரை மற்றும் நிர்வாகிகள் 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகிக்கு ஓட்டு சேகரித்தனர்.
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். தொடர்ந்து 11வது வார்டு, 8வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தனர். பின்னர் நிருபர்களிடம் அருண்குமார் கூறியதாவது: கூடலுார் நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க பலமுறை கைப்பற்றி உள்ளது. கூடலுார் நகராட்சி அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இம்முறை 20 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. 15 வார்டுகளை கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் என்றார்.