ஆண்டிப்பட்டி அருகே டூ வீலர் டயர் வெடித்த விபத்தில் பெண் பலி

ஆண்டிப்பட்டி அருகே டூ வீலர் டயர் வெடித்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

Update: 2022-04-01 01:15 GMT

ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வசிக்கும் அழகர்சாமி என்பவரது மனைவி ராஜலட்சுமி, 40. இவர் தனது கணவருடன் டூ வீலரில் தெப்பம்பட்டி கோயிலுக்கு சென்றார். மதுரை ரோட்டில் இவர்கள் சென்ற போது, டூ வீலரின் டயர் வெடித்தது. அப்போது டூ வீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட ராஜலட்சுமி, தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News