ஆண்டிபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர்: விபத்தில் வாலிபர் பலி
ஆண்டிபட்டி அருகே, அதிவேகமாக சென்ற டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் பாய்ந்ததில் வாலிபர் பலியானார்.;
ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே உள்ள ஒட்டணை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, 35. இவர், இன்று காலை, அதிவேகமாக டூ வீலர் ஓட்டிக் கொண்டு, கடமலைக்குண்டில் இருந்து, தனது கிராமத்திற்கு சென்றார்.
பொன்னகர் அருகே இவர் செல்லும் போது, ஒரு வளைவில் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்தது. அதே வேகதத்தில் அருகில் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.