தேனி மாவட்டத்தில் டூ வீலர் ஒட்டி வந்த இருவர் விபத்தில் பலி
தேனி மாவட்டத்தில் நடந்த இரண்டு டூ வீலர் விபத்துக்களில் இருவர் பலியாகினர்.;
கூடலுார் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் பிரதீ்ப், 19. இவர் கம்பத்தில் இருந்து டூ வீலரில் கூடலுார் வந்து கொண்டிருந்தார். வழியில் கம்பம் நோக்கி சென்ற லாரி மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்தார். கூடலுார் போலீசார் லாரி டிரைவரான சிவா, 32வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் சரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 35. இவர் டூ வீலரில் திண்டுக்கல்- தேனி ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.