கவிஞர் வெண்ணிலா பற்றி தேனி கலெக்டர்- எஸ்.பி.யிடம் விவசாயிகள் புகார்

கவிஞர் வெண்ணிலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி கலெக்டர், எஸ்.பி.யிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்

Update: 2022-01-24 12:00 GMT

கவிஞர் வெண்ணிலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தேனி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்தனர்.

முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுக் பற்றி அவதுாறு கருத்துகளை வெளியிட்ட கவிஞர் வெண்ணிலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தேனி கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார் செய்தனர்.

முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல்பென்னிகுக் பற்றி கவிஞர் வெண்ணிலா தவறான அவதுாறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெண்ணிலா தனது கருத்துகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருக்கும் என விவசாய சங்கங்கள் எச்சரித்து இருந்தன.

ஆனாலும் கவிஞர் வெண்ணிலா தனது கருத்துகளில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த செயல் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்று பாரதியகிஷான் சங்க தேனி மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் தலைமையில் விவசாயிகள் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கவிஞர் வெண்ணிலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திலும், எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் செய்தனர். (கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் பணிநிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். எனவே விவசாயிகள் அவர்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை). தமிழக முதல்வருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News