உத்தமபாளையம் அருகே டூ வீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே டூ வீலர் மீது டிப்பர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.;
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பக்கம் உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது29.) இவர் அனுமந்தன்பட்டியில் இருந்து கம்பம் நோக்கி டூ வீலரில் சென்றார். புதுப்பட்டி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி டூ வீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார் டிப்பர் லாரி டிரைவர் கணேசனை கைது செய்தனர்.