40 வயதில் 44 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்

ஒரு பெண் தனது 40 வயதிற்குள் 44 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Update: 2023-04-12 16:30 GMT

நாற்பது வயதிற்குள் நாற்பத்தி நான்கு குழந்தைகளை பெற்ற பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்.

உலக நாடுகள் எல்லாம் குழந்தைகளை பெற்றுத்தாருங்கள் என தனது நாட்டு மக்களை கெஞ்சிக் கொண்டிருக்கின்றன. சீனாவில் ஒரு கல்லுாரி ஒரு வார விடுமுறை அறிவித்தது. எதற்கு தெரியுமா? கல்லுாரியில் படிக்கும், மாணவ, மாணவிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கத்தான். இதனை வெளிப்படையாக சொல்லாமல், காதலிக்கவும், வாழ்க்கை துணை தேடவும் வாய்ப்பு வழங்கவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நிலையோ அந்தோ பரிதாபம். தனது நாடு ஒன்று எதிர்காலத்தில் இருக்குமா என சந்தேகமாக உள்ளது என அந்த நாட்டு அமைச்சரே புலம்புகிறார். அந்த அளவு குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. இப்போது குழந்தை பிறப்பு சரிந்து வருவது உலகளாவிய பிரச்னையாக மாறி உள்ளது. இந்த நிலையில் தான் ஆப்ரிக்க நாட்டில் நடந்த ஒரு சம்பவம் உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. 40 வயதிற்குள் 44 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை பற்றி உலக நாடுகள் பேசத்தொடங்கி உள்ளன.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணமாகி உள்ளது. அதாவது மரியத்திற்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13-வது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் தான் உலகின் மிகவும் ஸ்பெர்டைல் பெண்ணாக கருதப்படுகிறார். அதன் பிறகு தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆகிறது. இதுவரை அவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவுலேட் என்ற நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவர் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது.

இப்போது 20 சிறுவர்களும், 18 சிறுமிகளும் மட்டுமே இருக்கிறார்கள். மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார். இதனால் மரியம் தனது குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்டு வருகிறார். இப்போது இவருக்கு உதவுவது குறித்து பலரும் ஆலோசித்து வருகின்றனர். சிலர் கை கொடுக்க தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News