இந்திய வான்வெளிக்கு வந்த அமெரிக்க குண்டு வீச்சு விமானம்

இந்திய வான்வெளிக்கு அமெரிக்காவின் பலம் வாய்ந்த விமானங்கள் வந்துள்ளன.

Update: 2023-04-13 17:00 GMT

பயிற்சிக்காக இந்திய வான்வெளிக்கு வந்துள்ள அமெரிக்காவின் பி.ஒன் ரக குண்டு வீச்சு விமானம்.

பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனும் தைவானில் சீனா என்ன செய்தாலும் கண்டு கொள்ள மாட்டோம். சீனாவுடனான எங்களின் வியாபாரமே முக்கியம் என அறிவித்து விட்டன. இந்த நிலையிலும் சற்றும் தயங்காத அமெரிக்கா தன் போக்கில் பலத்த ஏற்பாடுகளை செய்கின்றது. அது சீனாவுக்கு எதிரான தன் கூட்டணியில் இந்தியாவினை முக்கிய நாடாக சேர்த்து கொண்டது.

இதனால் இந்திய வரலாற்றிலே முதன் முறையாக அமெரிக்காவின் மிக சக்தி வாய்ந்ததும், ஒரு பிரதேசத்தையே தன் குண்டுவீச்சால் சிதைக்க வல்லதுமான பி1 ரக விமானங்களை இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புகின்றது. (பயிற்சிக்கு வந்த விமானங்கள் இந்தியாவிலேயே நிலைநிறுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது).இந்திய அமெரிக்க கூட்டு விமானப்படை பயிற்சியில் இந்த ரக விமானங்கள் பங்கு பெறுகின்றன. அடுத்து எப் 35, எப் 22 ராப்டர் போன்ற விமானங்களும் இந்திய மண்ணுக்கு வர உள்ளன.

இந்திய ஜப்பானிய கூட்டு விமானப்படை பயிற்சிகள் கிழக்கே நடந்து கொண்டுள்ளன. அதே நேரம், இந்திய அமெரிக்க விமான பயிற்சிகள் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த விமானங்களோடு நடக்கின்றன. இதனால் சீனா மிகப் பெரும் யோசனையில் மூழ்கி விட்டது. 1950ல் இருந்தே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனும் வகையில் இந்தியா தான் அமெரிக்காவின் தேர்வாக இருந்தது. ஆனால் நேரு அறிவித்த "அணிசேரா கொள்கை" காரணமாக இந்தியா அனாதையானது.

அந்த அனாதை இந்தியாவினைத் தான் சீனா அன்று போட்டு அடித்தது. அந்நேரம் சோவியத் ரஷ்யா வாயே திறக்கவில்லை. ஆம், இந்திய ஜனநாயகத்தை சோவியத் விரும்பியதே இல்லை, இந்தியா ஒரு கம்யூனிச நாடாக மாற வேண்டும் என்பதே அதன் விருப்பமாய் இருந்தது. அந்த இந்தியாவினை தன் கொள்கை கூட்டாளி சீனா தாக்குதல் நடத்தியது சோவியத்துக்கு உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு இந்தியா பாகிஸ்தான் போரில் அமெரிக்க தலையீடு வந்ததாலே ரஷ்யா தலையிட்டதே தவிர இந்தியா மேல் அதற்கு ஒரு காலமும் அரசியல் கொள்கை ரீதியான நட்பு இல்லை. அதற்கு வாய்ப்பும்இல்லை. 1962ல் அமெரிக்க கென்னடி கொடுத்த ஆயுதங்கள் கொஞ்சமல்ல, அந்நேரம் சீனபோர் நின்றாலும் 1965ல் பாகிஸ்தானை பந்தாட அந்த ஆயுதங்கள்தான் கைகொடுத்தன.

இந்திய அமெரிக்க உறவுகள் இந்திய ஐரோப்பிய உறவு, இந்திய ரஷ்ய உறவு என பல காரணங்களுக்காக பாதிக்கபட்டது. காங்கிரஸ் அதனை செய்தது. இந்த அனுகூலத்தை பாகிஸ்தான் பெற்றது. மோடி வந்த 2014ம் ஆண்டுக்கு பின் காட்சிகள் மாறின., 1950லே நடந்திருக்க வேண்டிய விஷயம் இப்பொழுது தான் நடக்கின்றது. இந்தியாவின் அணி சேரா கொள்கையினை பிரதமர் மோடி மாற்றி பலமிக்க இந்தியாவினை உருவாக்கி கொண்டிருக்கின்றார்

அவ்வகையில் சக்திவாய்ந்த பி1 ரக விமானங்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக்க இந்திய வானுக்கு வந்திருக்கின்றது. மிக பலமான இந்தியா உருவாகி கொண்டிருக்கின்றது. இனி இந்தியாமேல் போர் என்பதை பாகிஸ்தான் நினைத்தே பார்க்காது, அதை சுத்தமாக மறந்து விட்டது என்பது தான் முக்கிய விஷயம். சீனா என்றாவது இந்தியாவிடம் உதைபட்டு பின்னர் திருந்தத்தான் போகிறது.

Tags:    

Similar News