200-க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்...
இருநுாறுக்கும் அதிகமான மகான்கள் சமாதியான ஒரு சிவாலயத்தை பற்றி இந்த பதிவில் படிக்கலாம்;
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட மகான்கள் சமாதி செய்து வைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம் காலப்போக்கில் கவனிப்பின்றி சிதைந்து அழியும் நிலைக்கு வந்தது. இப்போது தனிநபர் ஒருவரின் திருப்பணிப்பால் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.
இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை. ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. அதில் ஒரு சிற்பம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பை காட்டுகிறது. அப்புறம்குழந்தை நிலை தடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டப்பட்டுள்ளது.
ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. அதனை தொடும் போது நமது மூச்சுநிலை பிராணாயாமத்தை உணர்கிறது. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத் தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது. இது பலரும் அனுபவித்த உண்மை. நீங்களும் சென்று அனுபவிக்கலாம்.
இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ளளது இந்த சிவாலயம். எல்லாவற்றையும் சொல்லி விட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும். இப்பொழுது இங்கு பவுர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது. யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது. இந்த போட்டோக்கள் அனைத்தும் ஆலய பராமரிப்பு செய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கிறது. பாக்கியமுள்ளவர்கள் பவுர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம். முடிந்தால் காணிக்கை செலுத்தலாம்.கட்டாயமில்லை.
ஆலய அமைவிடம்: தென்காசி - மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது. கடையநல்லூரிலிருந்து ஆட்டோ வாகன வசதியுள்ளது. சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம். திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் என்ற இந்த கோயிலில் சூரியன் மறைந்து விட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதை இப்போதும் காணலாம்.