ஒரு மாதத்திற்கு பின்னர் தேனியில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் பரவலாக சாரல் மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்;
தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் லேசான சாரல் பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி போடியில் 5.2 மி.மீ., கூடலுாரில் 3.2 மி.மீ., மஞ்சளாறில் 10 மி.மீ., பெரியகுளத்தில் 31 மி.மீ., பெரியாறு அணையில் 6 மி.மீ., சோத்துப்பாறையில் 21 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.2 மி.மீ., வைகை அணையில் ஒரு மி.மீ., மழை பதிவானது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.