கூடலுார் கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
கூடலுாரில் கோயில் திருவிழாவை தொடர்ந்து இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.;
தேனி மாவட்டம், கூடலுாரில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
கூடலுாரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கூடலுார் பெட்ரோல் பங்க்கில் இருந்து லோயர்கேம்ப் வரை இந்தபந்தயம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து இரட்டை மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மாடுகளுடன் பங்கேற்றனர்.
மொத்தம் 5 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் வென்றவர்களுக்கு தரவாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடலுார் தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை, நிர்வாகி ஜே.கே.லால்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.