தேனி மாவட்டத்தில் 92 கஞ்சா வியாபாரிகளின் 99 வங்கிக் கணக்குகள் முடக்கம்

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி உள்ள 92 கஞ்சா வியாபாரிகளின் 99 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.;

Update: 2022-05-31 02:35 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் அண்மையில் கஞ்சா விற்பனை, பதுக்கல், கடத்தல் தொடர்பான 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 81 வழக்குகளில் தொடர்புடைய 92 குற்றவாளிகளின் 99 வங்கி கணக்குகளை மாவட்ட போலீஸ் நிர்வாகம் முடக்கி உள்ளது. இதர வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கஞ்சா விற்றாலோ, பதுக்கினாலோ, கடத்தினாலோ அவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் அத்தனை வங்கி கணக்குகளும் முடக்கப்படும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே எச்சரித்து உள்ளார்.

Tags:    

Similar News