போடி தெருவில் உலா வந்த 9 அடி நீள சாரைப்பாம்பு
போடி வீதியில் சுற்றி திரிந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.;
போடி வீதியில் உலா வந்த ஒன்பது அடிநீளம் உள்ள சாரைப்பாம்புடன் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல்.
போடி முதலாவது வார்டு ஜெயராம்பஞ்சு பேட்டை பின்புறம் உள்ள தெருவில் இன்று ஒன்பது அடிநீளம் உள்ள சாரைப்பாம்பு உலா வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு படையினர் மீட்பு உபகரணங்களுடன் வந்து பாம்பினை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் வனத்துறை உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டனர். கடந்த வாரம் இந்த இடத்திற்கு அருகே உள்ள வலத்துறை பகுதியில் எட்டு அடி நீளம் உள்ள கருநாகம் உயிருடன் பிடிக்கப்பட்டு வனத்திற்குள் விடப்பட்டது. இப்பகுதியில் கொட்டகுடி ஆறும், தென்னந்தோப்புகளும் அதிகம் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் இருக்கும். எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.