தேனியில் நிதி நிறுவனம் நடத்தி 800 பேரிடம் ரூ.17 கோடி மோசடி

நிதி நிறுவனம் நடத்தி 800 பேரிடம் டெபாசிட் வாங்கி 17 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-20 02:51 GMT

திண்டுக்கல் ரெட்டியார்சந்திரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் கோவையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில், பெங்களூரு உட்பட பல இடங்களில் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. வத்தலகுண்டை சேர்ந்த ஆனந்த் என்பவர் தேனி கிளைக்கு மேலாளராக உள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் மட்டும் 64 பேரிடம் 4.5 கோடி ரூபாய் டெபாஸிட் பெற்றுள்ளார்.

மாநிலம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 800 பேர் 17 கோடி ரூபாய் டெபாஸிட் செய்துள்ளனர். (இதன் அளவு இன்னும் அதிகரிக்கலாம்). இந்நிலையில் தேனி அலுவலகம் சில மாதங்களுக்கு முன்னர் முன் அறிவிப்பின்றி மூடப்பட்டது. இது குறித்து சிவக்குமார், இந்திரா உட்பட பலர் தேனி குற்றப்பிரிவில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துச்சாமியை கைது செய்தனர். தேனி கிளை மேலாளர் ஆனந்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News