தேனி மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.;
தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே கொரோனா தொற்று மிகுந்த கட்டுக்குள் இருந்து வந்தது. எப்போதாவது ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டுமே தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே தினசரி பாதிப்பு இருந்து கொண்டே இருந்தது. அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் 673 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று அதிகாலை வெளியானது. இதில் ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சமீபகாலங்களில் இந்த அளவு தொற்று அதிகரிப்பு கண்டறியப்பட்டதில்லை. இதனால் தேனி மாவட்ட நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.