தேனி மாவட்டத்தில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று

Corona Cases in Tamilnadu - தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் இன்றும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-24 03:18 GMT

பைல் படம்.

Corona Cases in Tamilnadu - தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் கொரோனா தொற்று பரிசோதனை நடந்து வருகிறது. இங்குள்ள ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை பார்க்க முடியும். ஒரு நாளைக்கு 3 முறை பரிசோதனை செய்யலாம். அதாவது தினமும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

கொரோனா தொற்று கடந்த 4 மாதங்களாக தொற்று இல்லாவிட்டாலும் பரிசோதனைகள் தொடர்ந்து வந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 2 பேருக்கும், நேற்று 9 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வெளியான முடிவுகள் அடிப்படையில் ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகிய விஷயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News